பயன்பாட்டுக்கு வந்தது ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி! - மருத்துவ உலகில் புதிய மைல்கல்!
Webdunia Tamil September 07, 2025 09:48 PM

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு வந்த புற்றுநோய் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் புற்றுநோய் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. புற்றுநோய்க்கு மருந்துகள் இல்லாத நிலையில் புற்றுநோய் கட்டிகளை லேசர் சிகிச்சை போன்றவற்றை பயன்படுத்தி அகற்றுவதே தற்போதைய மருத்துவ முறையாக இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டறிந்துள்ளதாக ரஷ்ய மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் அறிவித்திருந்தது. எண்டோரோமிக்ஸ் என்ற இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்ததில் அனைத்து ரக பரிசோதனையிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தடுப்பூசி மருத்துவ பயன்பாட்டிற்கு வந்துள்ளது. mRNA அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசி புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட RNAக்கு ஏற்ப ப்ரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.

இது மருத்துவ உலகில் பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படும் நிலையில் விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.