எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா
Webdunia Tamil September 05, 2025 03:48 PM

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றி தான் சொல்லாத விஷயங்கள் பரப்பப்படுவதாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாகச் செய்திகள் பரவுகின்றன. அது தவறானது, அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது" என்று அவர் கூறியுள்ளார்.

தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. இடையே ஏற்பட்ட கூட்டணி முறிந்துவிட்டதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக ஒரு சில செய்திகள் பரவின. அது தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பிரேமலதா விஜயகாந்த் இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.