உலகின் நீளமான சாலை! அடேங்கப்பா 30,600 கிமீ தூரமா! எந்த நாட்டில் உள்ளது என்று தெரியுமா?
Seithipunal Tamil September 04, 2025 01:48 AM

உலகின் மிக நீளமான சாலையாக அறியப்படும் பான்-அமெரிக்கன் ஹைவே சுமார் 30,600 கிலோமீட்டர் நீளமுடையது. வட அமெரிக்காவின் வட துருவப் பகுதியிலிருந்து தென் அமெரிக்காவின் கடைசி முனை வரை விரிந்து செல்லும் இந்த சாலை, மொத்தம் 14 நாடுகள் வழியாகப் பயணிக்கிறது.

இந்த நீளமான நெடுஞ்சாலை அலாஸ்காவின் பிருடோ பே (Prudhoe Bay) யில் தொடங்கி, அர்ஜென்டினாவின் உஷுயா (Ushuaia) வரை செல்கிறது. அதிகாரப்பூர்வமாக, அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் உள்ள நுவோ லாரெடோ தான் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
சுமார் 19,000 மைல் நீளமுள்ள இந்த பாதையை முழுவதும் கடந்து செல்ல தினமும் 500 கி.மீ பயணித்தாலும், 60 நாட்களுக்கு மேல் ஆகும் என நிபுணர்கள் கணக்கிடுகின்றனர்.

பான்-அமெரிக்கன் ஹைவே வழியாக செல்லும் நாடுகள்:கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, குவாட்டமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், நிகராகுவா, கோஸ்டா ரிகா, பனாமா, கொலம்பியா, ஈக்வடோர், பெரு, சிலி, அர்ஜென்டினா.ஒவ்வொரு நாடும் தங்களுக்கான பகுதியைத் தனித்தனியாக பராமரித்து வருகின்றன.

இந்த சாலை அமைக்கும் பணி 1920களில் தொடங்கியது. பல நாடுகளுக்கிடையே சுற்றுலா, வர்த்தகம், கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டது. 1937-ஆம் ஆண்டு 14 நாடுகள் ஒப்பந்தம் செய்து, பராமரிப்பில் ஈடுபட்டன.
பின்னர், 1960-ஆம் ஆண்டு முழுமையாக பொதுப் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இந்த சாலை, ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே நேராக செல்கிறது. முழுப் பாதையில் எங்கும் U-டர்ன் இல்லை என்பதே இதன் தனிச்சிறப்பு.இந்தியாவுடன் ஒப்பிடுகையில்…இந்தியாவில் உள்ள நீளமான தேசிய நெடுஞ்சாலை என்எச் 44 (4,112 கி.மீ) தான். ஆனால், அது பான்-அமெரிக்கன் ஹைவேயுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறியதாகவே திகழ்கிறது.

இன்று, உலகின் நீளமான நெடுஞ்சாலையாக இருக்கும் பான்-அமெரிக்கன் ஹைவே, சுற்றுலா பயணிகளுக்கும், சாலை ஆராய்ச்சியாளர்களுக்கும் வியப்பாகவும் பெருமையாகவும் திகழ்கிறது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.