வயதை மறந்த காதல் ..பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்!
Seithipunal Tamil September 03, 2025 11:48 PM

27 வயது இளம்பெண் ஒருவர் 17 வயது  பள்ளி மாணவனை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க  பள்ளி மாணவன், ஒருவன் கடந்த சில சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.இதனால் அதிர்ச்சியடைந்த  அந்த மாணவரின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் போலீசார் அவரை தேடிவந்தனர்.

இந்தநிலையில் சேர்த்தலா பள்ளிபுரம் பகுதியை சேர்ந்த சனுஷா என்ற இளம்பெண்ணும் மாயமானார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது . அதனை தொடர்ந்து இருவரும் மாயமானது தொடர்பாக சேர்த்தலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அப்போது இளம்பெண் சனுஷா பள்ளி மாணவனை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. அவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்ததால் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. 

இந்தநிலையில்  இளம்பெண் சனுஷா மற்றும் பள்ளி மாணவனின் செல்போன் எண்ணை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது இளம்பெண் சனுஷா தனது உறவினர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி இருக்கிறார். அதனை வைத்து இளம்பெண்ணின் இருப்பிடத்தை போலீசார் அதிரடியாக கண்டுபிடித்தனர்.அப்போது அவர் கொலூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கொல்லூர் விரைந்து சென்று அங்கு ஒரு இடத்தில் தங்கியிருந்த இளம்பெண் மற்றும் மாணவரை பிடித்தனர். பின்பு இருவரையும் சேர்த்தலாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது விசாரணையில் இளம்பெண் சனுஷாவுக்கு பள்ளி மாணவருடன் பழக்கம் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவரை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி கொல்லூருக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதால் அவர்கள் இருப்பிடம் தெரியவந்தது. பள்ளி மாணவனை அழைத்து சென்ற இளம்பெண் சனுஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொட்டாரக்கரா சிறையில் அடைத்தனர்.27 வயது இளம்பெண் ஒருவர் 17 வயது  பள்ளி மாணவனை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.