மனித நுரையீரலில் வளர்ந்த பட்டாணி செடி! ஆகா இது அதுல... சிறு வயதில் சொன்னது உண்மையாகிடுச்சே!
Seithipunal Tamil September 03, 2025 05:48 PM

மூச்சுத் திணறல் காரணமாக அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரோன் ஸ்வேடனின் நுரையீரலை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் ஆரம்பத்தில் குழம்பினர்.

காரணம், அது செடியைப் போன்றே தோன்றியது. முதலில் வைரஸ் தொற்று என்று சந்தேகித்த அவர்கள், தொடர்ந்து செய்த ஆய்வில் அது பட்டாணிச் செடி என்பதும் உறுதியாகியது.

சிறுவர்களிடம் பெரியவர்கள் அடிக்கடி சொல்லும் எச்சரிக்கை உண்டு – கொட்டையை விழுங்கினால் வயிற்றுக்குள் மரம் வளரும் என. இதுவரை அது வெறும் பொய் மிரட்டல் என்று மட்டுமே கருதப்பட்டது. ஆனால் ரோனின் உடலில் நடந்த அசாதாரண சம்பவம் அந்த பழைய சொல்லுக்கு ஒரு வித்தியாசமான உண்மையை வெளிப்படுத்தியது.

பல மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ரோன், தனக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டிருக்கும் என நினைத்திருந்தார். ஆனால் எக்ஸ்ரேவில் தெரிய வந்தது முற்றிலும் வித்தியாசமான தகவல் – அவரது நுரையீரலில் சிறிய பட்டாணிச் செடி வளர்ந்து கொண்டிருந்தது.

மருத்துவர்கள் கூறுகையில், சமைக்கப்படாத பட்டாணியை ரோன் சாப்பிடும் போது தவறுதலாக அது காற்றுக்குழாய் வழியாக நுரையீரலுக்குள் சென்றிருக்கலாம். அங்கு ஈரப்பதம் மற்றும் சூழ்நிலை காரணமாக அது வேர் ஊன்றி வளர்ந்திருக்க வாய்ப்புள்ளது.

இந்த சம்பவம் மருத்துவ உலகையே அதிர்ச்சியடையச் செய்ததோடு, மனித உடல் எவ்வளவு வித்தியாசமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை உலகிற்கு நினைவூட்டியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.