ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் அவர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில், கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.
இதற்கு பின்னணியாக அவரது உறவினர் ரஞ்சித் பர்தாகூரின் தாக்கம் இருந்ததாக கூறப்பட, சஞ்சுவை மீண்டும் அணியில் எடுக்காத திட்டமிடல் நடைபெற்றதாக வாதங்கள் எழுந்தன.
இதற்கிடையே, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் சேர்வார் என்ற பேச்சு அதிகரித்தது. மேலும் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. எனினும், ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்தில் உள்ள ஒருவரால் இந்த தகவல் மறுக்கப்பட்டது.
இந்நிலையில், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியிடம் தனது விடுவிப்பை கோரியதாக தகவல்கள் வெளியாகின. இந்த பரபரப்பைத் தொடர்ந்து, சஞ்சுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக பக்கம் பின்தொடர்ந்து இருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது.
குறிப்பாக சஞ்சு சாம்சன் விரைவில் சிஎஸ்கே அணியில் இடம்பெற வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.