2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் ஜனாதிபதி முர்மு..!!
Seithipunal Tamil September 01, 2025 12:48 AM

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். முதலில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைகழகத்தின், 10-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். 

இந்த விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதுடன், படிப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்க பதக்கங்களையும் வழங்க உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஹெலிகாப்டரில், திருவாரூர் மத்திய பல்கலைகழகத்திற்கு செல்கிறார்.

அதனை தொடர்ந்து செப்டம்பர் 2ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கி 120ஆவது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.குடியரசுத் தலைவரின் இந்த வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.