25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்: தவெக தலைவர் விஜய் உத்தரவு
WEBDUNIA TAMIL September 01, 2025 12:48 AM

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை வலுப்படுத்தும் நோக்குடன் புதிய நிர்வாக அலகுகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, இனி 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட வேண்டும் என கட்சியின் தலைவர் விஜய், மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் படி ஒவ்வொரு 25,000 வாக்காளர்களுக்கும் ஒரு ஒன்றிய செயலாளர் நியமிக்கப்படுவார். இந்த புதிய ஒன்றிய செயலாளர்களை நியமிக்க பணியை மாவட்ட செயலாளர்கள் தொடங்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என்ற நிலை உள்ள நிலையில், தற்போது தொகுதி வாரியான வாக்குச்சாவடிகளின் அடிப்படையில் ஒன்றிய செயலாளர்கள் பதவி பிரிக்கப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த நிலையில் கட்சியின் தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன், இந்த ஒன்றிய செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளை அடிமட்ட அளவில் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.