ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது..!
Newstm Tamil August 09, 2025 02:48 PM

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் விலை மாற்றத்துடனேயே இருக்கிறது. இதில் பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் கடந்த 1-ந்தேதி விலை குறைந்திருந்த நிலையில், அதற்கு மறு நாளில் இருந்து (2-ந்தேதியில் இருந்து) விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 470-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 75 ஆயிரத்து 560 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமிற்கு ரூ. 25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 445க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.127-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.

பொருளாதாரத்தில் தொடரும் அசாதாரண சூழல், அமெரிக்க வரி விதிப்பு போன்ற காரணங்களினால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

09.08.2025 ஒரு சவரன் ரூ. 75,560 (இன்று)

08.08.2025 ஒரு சவரன் ரூ. 75,760 (நேற்று)

07.08.2025 ஒரு சவரன் ரூ. 75,200

06.08.2025 ஒரு சவரன் ரூ. 75,040

05.08.2025 ஒரு சவரன் ரூ. 74,960

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.