திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கே.பாலச்சர்ந்த இயக்கத்தில் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்கள், வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் என தொடர்ந்து 50 ஆண்டுகளாக சினிமாவில் உச்சநட்சத்திரமாக கோலோச்சி வருகிறார். சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி, தனது 171வது படமான ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்கு , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும்,
50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
இப்பொன்விழா ஆண்டில் Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கூலி (Coolie) திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.