Breaking: திடீர் டிவிஸ்ட்..! அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி மைத்ரேயன் நீக்கம்… எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு…!!!!
SeithiSolai Tamil August 13, 2025 08:48 PM

அதிமுக கட்சியின் முன்னாள் எம்பியும் அமைப்பு செயலாளருமான மைத்ரேயன் சற்று நேரத்தில் திமுகவில் இணைவதாக செய்தி வெளியான நிலையில் தற்போது இணைந்துள்ளார். அதிமுக கட்சி இரண்டாக உடைந்த போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருந்த அவர் அதன் பிறகு பின்னர் பாஜகவில் இணைந்தார்.

அதன் பிறகு கடந்த வருடம் மீண்டும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து தற்போது விலகி திமுகவில் அவர் இணைய இருப்பதாக செய்தி வெளியான நிலையில் தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார்.

இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து 2002, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் அதிமுக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானார்.

அதிமுக பிளவுக்கு பிறகு சிறிது காலம் பாஜகவில் இணைந்த அவர் பின்னர் ஓ பன்னீர் செல்வத்துடன் பணியாற்றிய பின்னர் மீண்டும் அதிமுகவுடன் இணைந்தார். இந்த நிலையில் தற்போது அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இவர் திமுகவில் இணைந்த பிறகு அடுத்த தேர்தலில் திமுகவில் வெற்றி உறுதியாகிவிட்டது எனவும் எடப்பாடி பழனிசாமி தன்னை ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் என நினைத்துக் கொண்டு அவர் செயல்படுவதாகவும் அவரின் போக்கு சரியில்லை எனவும் விமர்சித்தார். என்னதான் ஊர் குருவி உயர உயர பறந்தாலும் அதுஸபருந்தாகாது என்றார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தற்போது மைத்ரேயனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். மேலும் அவர் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவரை கட்சியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.