தமிழ்நாடு முழுவதும் வாரம் தோறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. சனிக்கிழமை தோறும் முகாம் நடைபெறும் நிலையில் வருகிற 16-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் விடுமுறை என்று சற்றுமுன் அரசு அறிவித்துள்ளது.
அன்றைய தினம் அரசு பொது விடுமுறை என்பதால் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறாது. மேலும் ஆகஸ்ட் 16ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை. மேலும் அதற்கு முந்தைய தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை. இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.