சுதந்திர தின விழாவிற்கு பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது! - பள்ளிகளுக்கு உத்தரவு!
WEBDUNIA TAMIL August 14, 2025 12:48 AM

நாளை மறுநாள் நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15 அன்று கொண்டாடப்படும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசியக்கொடி ஏற்றிக் கொண்டாட வேண்டும்.

பள்ளிகளில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், அந்தந்த பகுதிகளை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும். பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது. தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்த நிலையிலோ ஏற்றக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.