தந்தையை திரும்ப திரும்ப ஓங்கி அறைந்த மகன்…! அமைதியாக வேடிக்கை பார்த்த தாய்… போலீஸ் வந்ததும் பல்டி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!
SeithiSolai Tamil August 14, 2025 02:48 AM

நாக்பூரில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் வயதில் மூத்த தந்தையை மகன் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த நபரின் தந்தை சோபா மீது அமர்ந்துள்ளார். அப்போது மகன் தனது தந்தையை கன்னத்தில் திரும்பத் திரும்ப ஓங்கி அறைந்து முடியை பிடித்து இழுத்து தாக்குகிறார்.

தந்தையின் அருகே அமர்ந்திருந்த தாய் அனைத்தையும் அமைதியாக கவனித்துக் கொண்டே இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் வீடியோ வேலை இல்லாததால் போலீசார் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த வயதானவர் தனது மகனை விட்டுக் கொடுக்காமல் பேசி அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என போலீசாரிடம் கூறி புகார் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரின் தாய் இது எங்களது குடும்ப விவகாரம். எதற்காக வந்தீர்கள் என போலீசாரை திட்டி உள்ளார். அதற்கு போலீசார் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி பெற்றோருக்கு எதிரான வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது என கூறிவிட்டு சென்றுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.