திமுகவில் இணைகிறாரா முன்னாள் அமைச்சர் தங்கமணி?
Top Tamil News August 14, 2025 04:48 PM

 2021 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தங்கமணி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.

EPS-ன் நம்பிக்கைக்குரியவராக திகழும் தங்கமணி, அதிமுகவில் இருந்து விலக இருப்பதாகவும், அவர் திமுகவில் இணையவிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது.

இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட தங்கமணி, “நான் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பதாகவும், திமுகவில் இருந்து எனக்கு அழைப்பு என்றும் செய்தி போட்டிருப்பது பார்த்து மிகவும் வருத்தமடைந்தேன்.

நான் ஆகஸ்ட் 11ஆம் தேதி தொண்டையில் சிறு அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருக்கும்போது இந்த செய்தி என்னை இன்னும் ரணம் அதிகமாக்கியது.

நான் கடந்த வந்த அரசியல் பயணத்தில் எம்ஜிஆர், அம்மா மற்றும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி என மூவரும் என இதயத்தில் என்றும் நீக்கமறநிறைந்துள்ளார்கள். அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது எனது உறவினர் என்பதையும் தாண்டி எங்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் உயிரை விட மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளவன். ஆகையால், அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவதை இந்த இயக்கத்தின் உயிர்மூச்சாக இருக்கிறேன்” என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

எனது இறுதி மூச்சு உள்ளவரை அதிமுக இயக்கம் தான் என் உயிர் மூச்சு. மூச்சு நின்றதற்கு பிறகு எனது உடலில் அஇஅதிமுக கொடி போர்த்தி தான் இருக்கும். எனது அரசியல் எதிரிகளின் தவறான தகவல் தெரிவித்ததை செய்தியா வெளியிட்டுள்ளனர். இதை முழுமையாக மறுக்கிறேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.