ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பாகிஸ்தான் தொடர்ந்து பரப்பி வருகிறது. குறிப்பாக அந்த நாட்டு ராணுவ தளபதி அசிம்முனீர், இந்தியா குறித்து அடாவடி பேச்சுக்களை பேசி வருகிறார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, தவறான கருத்துகளை பரப்பினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து போர் வெறி மற்றும் வெறுப்பு கருத்துகள் பரப்பி வருவது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. தங்களது தோல்விகளை மறைக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் பாகிஸ்தான் மீண்டும், மீண்டும் ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு தவறான செயலும், வேதனையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும் என்