உஷார்... நாளை முதல் சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்!
Dinamaalai August 16, 2025 02:48 PM

நாளை ஆகஸ்ட் 17ம் தேதி முதல் சென்னையின் முக்கிய சாலையில்  போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது. மேம்பாலப் பணிகள் காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் நாளை முதல் சோதனை அடிப்படையில் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளுக்காக தேனாம்பேட்டையில் நாளை ஆகஸ் 17ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை  முதல், அண்ணா சாலையில் உள்ள சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தியாகராய சாலை, மா.போ.சி. சந்திப்பு, வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்பி), விஜயராகவ சாலை சந்திப்பு, விஜயராகவ சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்.

அண்ணா சாலையிலிருந்து தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

தி.நகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் தியாகராய சாலையில் உள்ள மா.போ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜயராகவ சாலை வழியாக சென்று அண்ணா சாலையை அடையலாம்.

தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.போ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னர் விஜயராகவ சாலையை அடைந்து பின்னர் அண்ணா சாலையை அடையலாம்.

அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் விஜயராகவ சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.