பாலியல் குற்றத்தில் டாப் 3 இடமே பாஜக ஆளும் மாநிலம் தான்….! ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு…? கனிமொழி எம்.பி காட்டம்….!!
SeithiSolai Tamil August 16, 2025 04:48 PM

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பெண்கள், பெண் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கூறினார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக கனிமொழி எம்.பி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா? என பதிவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.