ITR Filing: வருமான வரிக் கணக்குத் தாக்கல் கடைசி தேதி இன்னும் தள்ளிப்போகிறதா? காரணம் என்ன?
Vikatan August 16, 2025 06:48 PM

இந்த ஆண்டு புதிய ஐ.டி.ஆர் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது... ஐ.டி.ஆர் போர்ட்டல் அப்டேட் செய்யப்பட்டது.

இதனால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் கடைசி தேதி செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வழக்கமாக, இந்தக் கடைசி தேதி, ஜூலை 31-ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மீண்டும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் கடைசி தேதியை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

வருமான வரி காரணம் என்ன?

பொதுவாக, 'யூட்டிலிட்டி' என்று கூறப்படுகிற வருமான வரிக் கணக்குத் தாக்கல் சாப்ட்வேர் ஏப்ரல் மாதமே திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதம் தான் திறக்கப்பட்டது.

அடுத்ததாக, ஜூலை மாதத்தின் இறுதியில் தான், ஐ.டி.ஆர் 1, 2, 3, 4 ஃபார்ம்கள் வெளியிடப்பட்டது. இன்னும் ஐ.டி.ஆர் 5 மற்றும் 6 ஃபார்ம்கள் வெளியிடப்படவில்லை.

மேலும், புதிதாக அப்டேட் ஐ.டி.ஆர் போர்ட்டலை சாப்ட்வேர் டெவலப்பர்கள் தங்களது சிஸ்டம்களில் அப்டேட் செய்யவும் நேரம் பிடிக்கிறது.

புதிதாக, அப்டேட் செய்யப்பட்ட போர்ட்டலைப் புரிந்துகொண்டு, சரியாக தகவல்களை உள்ளிட இன்னும் அதிக நேரம் பிடிக்கிறது.

இ-ஃபைலிங் போர்ட்டலில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறும் ஏற்படுகிறது.

அதனால்...

இவ்வளவு பிரச்னைகள் மத்தியில், இ-ஃபைலிங் செய்வது... அதுவும் பார்த்து சரியாக செய்வது கடினமாக இருக்கிறது என்றும், அதனால், செப்டம்பர் 15-ம் தேதியில் இருந்து கடைசித் தேதியை இன்னும் நீட்டிக்குமாறு கோரிக்கைகள் எழுந்து உள்ளன.

இது குறித்து குஜராத் வர்த்தக சபை வருமான வரித் துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.

இந்தக் கோரிக்கையை ஏற்று வருமான வரித் துறை இன்னும் கடைசி தேதியை நீட்டிக்குமா... உங்களக்கு கால நீட்டிப்பு வேண்டுமா? - கமெண்ட் செய்யுங்கள்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.