சென்னை, ஆகஸ்ட் 16 : சொத்தில் பங்கு தராததால் ஆத்திரமடைந்த மருமகன் மாமனாரை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளை பார்க்க வீட்டிற்கு வந்த மாமனாரிடம், மருமகன் சொத்து குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மருமகன் இந்த கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளார்.
சொத்தில் பங்கு தராததால் ஆத்திரம் – மாமனார் அடித்து கொலைதிருவண்ணாமலையை சேர்ந்தவர் 45 வயதான ராஜா. இவருக்கும் சரண்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், ராஜா தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சென்னை பல்லாவாரத்தை அடுத்த பொழிச்சலூரில் வசித்து வந்துள்ளார். இவரது 55 வயது மாமனார் அழகர்சாமி தேனி மாவட்டம் கல்லுப்பட்டியில் வசித்து வந்துள்ளார். இவர் ஊரில் உள்ள சொத்துக்களில் ராஜாவின் குடும்பத்திற்கு பங்கு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ராஜா தனது மாமனார் மீது மிகுந்த கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க : புதுக்கோட்டையில் தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை.. மூச்சு திணறி உயிரிழந்த சோகம்..
இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்த கொடூரம்இந்த நிலையில், ஆகஸ்ட் 13, 2025 அன்று இரவு பொழிச்சலூரில் உள்ள மகள் வீட்டுக்கு அழகர்சாமி சென்றுள்ளார். அப்போது ராஜா அவரிடம் சொத்து தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். சொத்து தொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜா வீட்டின் வெளியே இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து தனது மானாரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க : மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர்.. போலீஸ் ரெய்டில் கையும், களவுமாக சிக்கியது எப்படி?
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவரும் காவல்துறைஇந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொந்த தராததால் ஆத்திரமடைந்த மருமகன், மாமனாரை தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.