அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை பசுமை வழிச்சாலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்திலும், திருவல்லிக்கேணியில் உள்ள எம்.எல்.ஏ விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் சிவாகி நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவின் வீட்டிலும், சீலப்பாடியில் உள்ள அமைச்சரின் மகனும் , பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமாரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற போது, காவலர்கள் அங்கு சோதனை செய்ய அனுமதி மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.