நானும் ட்ரம்பும் வெளிப்படையாக பேசினோம். பேச்சுவார்த்தை விரைவில் உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன் என்று ட்ரம்புடனான பேச்சுவார்த்தைப் பின்னர் புதின் கூறினார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையானது, அமெரிக்காவின் ஆங்கரேஜ் பகுதியில் உள்ள ராணுவ படை தளத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கியது. இதில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 3 மணிநேரத்திற்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது. இதனை தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது டிரம்பை புதின் புகழ்ந்து பேசினார். புதின் கூறும்போது, எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம்.
டிரம்ப் அதிபராக இருந்திருந்தால், போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான் என்று கூறினார். டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.
உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை, எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. அதேவேளையில், நீண்டகால தீர்வை உருவாக்குவதற்காக, போருக்கான முதன்மை விளைவுகள் எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டிய தேவை உள்ளது என எங்களிடம் கூறப்பட்டது.
ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் பாதுகாப்பு சமநிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் பலமுறை கூறி வந்தோம். உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் இன்று கூறியதற்கு நான் உடன்படுகிறேன் என்றார். அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என்றும் புதின் கூறினார்.
இதே போன்று டிரம்ப் கூறுகையில், ”நாங்கள் மிக ஆக்கப்பூர்வ கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளோம். பல விசயங்களை நாங்கள் ஒப்பு கொண்டோம். விரைவில் நேட்டோவை அழைத்து பேசுவேன். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் அழைத்து இன்று நடந்த சந்திப்பு பற்றி அவரிடம் பேசுவேன் என்று கூறினார்.
நாங்கள் சிறந்த முன்னேற்றத்திற்கான சில விசயங்களை இன்று செய்துள்ளோம். விரைவில் அதுபற்றி உங்களிடம் பேசுவேன். மிக விரைவில் மீண்டும் உங்களை நாங்கள் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்புக்கு முன்னர் கென்னடி மையத்தில் நிருபரின் கேள்விக்கு டிரம்ப் பதிலளித்து பேசும்போது, முதல் கூட்டம் நன்றாக நடந்தால், உடனடியாக 2-வது கூட்டம் ஒன்றை நாங்கள் நடத்துவோம். உடனடியாக அதனை நடத்தவே நான் விரும்புவேன் என்றார். புதின் மற்றும் ஜெலன்ஸ்கி பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்திற்கான சாத்தியம் பற்றியும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
அதிபர் புதின், அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவர்கள் விரும்பினால் நானும் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று டிரம்ப் கூறினார். 2-வது கூட்டம் அதிக ஆக்கப்பூர்வ ஒன்றாக இருக்கும் என்றும் கூறினார். எனினும், நான் விரும்பிய பதில்கள் கிடைக்கவில்லை என்றால் 2-வது கூட்டம் நடைபெறாது என்றும் டிரம்ப் கூறினார். இந்த சூழலில், பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்துள்ளது. தொடர்ந்து ரஷியாவில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இதனால், 2-வது கூட்டத்தில் நல்ல முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?