தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் கூலி படம் வெளியானது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. நாகர்ஜூனா, அமீர்கான், சௌபின் சாகிர், சத்யராஜ், சுருதிஹாசன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக உள்ளது. முதல் நாளில் மட்டும் கூலி படம் உலகளவில் 153 கோடியை வசூலித்து பிக்கஸ்ட் ஓபனராக உள்ளது. 600 கோடி வரை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர்களைக் களம் இறக்கியுள்ளார் லோகேஷ். அவர்களுக்குத் தகுந்த கதாபாத்திரம் அமைத்து ஸ்கோப் கொடுத்துள்ளார். படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை. நண்பனைக் கொன்னவனைக் கண்டுபிடித்து பழி வாங்குகிறார் ரஜினி. வில்லனின் பின்புலம் வழக்கமான கடத்தல் தொழில்தான். படத்தில் காமெடி இல்லை. ரஜினிக்கு ஜோடி இல்லை. பாட்டு, பைட் சூப்பர். ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் அதிகம் என்பதால் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு முதல் நாள் கலவையான விமர்சனம் கிடைத்தது.
ஆனால் படத்தில் எதுவும் இல்லை என்றாலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. ரஜினியின் வழக்கமான ஸ்டைல் இல்லை. படத்தை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர் என்பது நேற்று திரையரங்கில் குவிந்த கூட்டத்தை வைத்து சொல்ல முடிகிறது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் 50 வருட திரை வாழ்க்கைக்கு இந்தப் படம் ஒரு பெரிய மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் 2 நாள் வசூல் என்னன்னு பார்க்கலாமா… sacnilkஅறிக்கையின்படி, கூலி படத்தின் முதல் நாள் இந்திய வசூல் 65 கோடி. 2வது நாள் வசூல் 53.5கோடி. ஆக மொத்தம் முதல் 2 நாள் இந்திய வசூல் 118.5 கோடி.