GST: "தீபாவளிக்குள் ஜி.எஸ்.டியில் மாற்றம்" - பிரதமர் மோடி பேசியது என்ன?
Vikatan August 16, 2025 02:48 PM

இன்று இந்தியாவின் 79-வது சுதந்திர தினம்.

செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி, 103 நிமிடங்கள் உரையாற்றினார். அவர் பிரதமராகப் பதவியேற்று, மிக அதிக நிமிடங்கள் உரையாற்றிய சுதந்திர தின உரை இது தான்.

2017-ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி குறித்த முக்கியமான அறிவிப்பை ஒன்றையும் இந்த உரையில் அறிவித்திருக்கிறார்.

ஜி.எஸ்.டி | GST அது என்ன?

"இந்த தீபாவளியை, உங்களுக்கான டபுள் தீபாவளியாக மாற்ற உள்ளேன்.

கடந்த எட்டு ஆண்டுகளில், ஜி.எஸ்.டி பல்வேறு பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் வரி சுமையைக் குறைத்துள்ளது.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அதை மறுபரிசீலனை செய்வதற்கான நேரம் வந்துள்ளது.

உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து, ஜி.எஸ்.டி குறித்து ரிவ்யூ செய்துவருகிறோம். இதற்காக மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்தத் தீபாவளிக்குள் அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி திருத்தம் வர உள்ளது. இதன் மூலம் வரி சுமை கணிசமாகக் குறையும். இதனால், சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் பெரிதும் பலனடைவார்கள்" என்று பேசியுள்ளார்.

இந்தத் திருத்தம் மூலம் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், சாதாரண மக்கள், சிறு, குறு, நடுத்தர மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கு வரி விகிதம் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

GST Collection ரூ.12,230 கோடி; Tamilnadu-க்குக் கிடைத்த இடம் எவ்வளவு தெரியுமா? | IPS Finance - 250

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.