சென்னை, ஆகஸ்ட் 13 : சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை ((Sanitation Workers Protest) அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனவும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை நடத்தி கொள்ளுங்கள் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் மண்டலம் ஐந்து ராயபுரம் மற்றும திரு.வி.க நகர் (மண்டலம் 6) ஆகிய மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு, 2025 ஜூலை 16ஆம் தேதி மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலகத்தில் 10 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மழை, வெயில் என பாராமல், தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ரிப்பள் மாளிகை முன்பு போரட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை காலி செய்யும்படி, காவல்துறை அனுப்பி நோட்டீஸை அமல்படுத்த கோரி, சென்னையைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.
Also Read : தமிழ்நாட்டில் 207 அரசு பள்ளிகள் மூடலா..? தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம்!
தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவுஇந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ.வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பதோடு, பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், தமிழக அரசு தரப்பில் காலி செய்யக் கூறி உத்தரவிட்டும், அவர்கள் தொடர்ந்து அந்த இடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களாக கலைந்து செல்ல அறிவுறுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தூய்மை பணியாளர்கள் தரப்பில், பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கோ எந்த இடையூறு ஏற்படுத்தவில்லை என தெரிவித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனுமதியின்றி நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த முடியாது என சென்ன உயர் நீதிமன்றம் கருதது தெரிவித்துள்ளது. மேலும், சட்டத்திற்கு உட்பட்டு, நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read : கோவை மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்.. அடுத்த 90 நாட்களுக்கு இந்த ரூட் தான்!
அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை நடத்திக் கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு இருந்து கலைந்து செல்ல மாட்டோம் என தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். தங்கள் போராட்டதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.