பஞ்சாங்கம் – ஆக.13 – புதன் | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%
||श्री:||
ஸ்ரீ ராமஜெயம்
பஞ்சாங்கம் | 13.08.2025 | புதன்கிழமை
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆடி ~ 28 { 13.8.2025 } புதன் கிழமை**
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ ஆடி மாதம் { கடக மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 8 37 am வரை சதுர்த்தி பின் பஞ்சமி
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 1.05 pm வரை உத்திரட்டாதி பின் ரேவதி
யோகம் ~ த்ருதி
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
அசுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00to 10.30am and 2.00to3.00pm
சூரியஉதயம் ~ காலை 6.06
சந்திராஷ்டமம் ~ சிம்மம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ பஞ்சமி
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (13-08-2025) ராசிபலன்கள்
மேஷம்பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். மறைமுகமான சில தடைகள் மூலம் தாமதம் உண்டாகும். நினைத்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீள நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : தாமதம் உண்டாகும்.
கிருத்திகை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். செலவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
பூர்வீக சொத்துக்கள் மூலம் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் பிறக்கும். பேச்சுக்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நம்பிக்கை ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். தொழில் ரீதியான முயற்சிகள் கைகூடும். மனதளவில் புதிய தெளிவுகள் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மிருகசீரிஷம் : அனுகூலம் பிறக்கும்.
திருவாதிரை : நம்பிக்கை ஏற்படும்.
புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.
முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். துணைவர் கேட்டதை வாங்கி கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். உறவினர்களின் சந்திப்புகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்
புனர்பூசம் : தடைகள் விலகும்.
பூசம் : சந்திப்புகள் உண்டாகும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
இழுபறியாக இருந்த காரியங்கள் முடியும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். குழந்தைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் நடைபெறும். பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திரம் : செலவுகள் உண்டாகும்.
வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். வியாபார அலைச்சல்களால் ஒருவிதமான பதட்டம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பொறுமை வேண்டும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் அளவுடன் இருக்கவும். உடல் நலத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : குழப்பமான நாள்.
அஸ்தம் : பொறுமை வேண்டும்.
சித்திரை : ஏற்ற இறக்கமான நாள்.
பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கால்நடை பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : ஆதாயம் ஏற்படும்.
சுவாதி : தீர்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : ஆர்வம் ஏற்படும்.
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். குழந்தைகளிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். பெரியோர் ஆதரவு நன்மையை தரும். சக பணியாளர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதுமையான விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
விசாகம் : வேறுபாடுகள் விலகும்.
அனுஷம் : ஒத்துழைப்பான நாள்.
கேட்டை : பொறுமை வேண்டும்.
பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். அரசு பணிகளில் இருந்த இழுப்பறிகள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : அனுபவம் உண்டாகும்.
பூராடம் : மாற்றம் உண்டாகும்.
உத்திராடம் : ஆர்வமின்மை குறையும்.
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். தொழில் சார்ந்த ஆலோசனைகள் மூலம் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : ஆர்வம் ஏற்படும்.
அவிட்டம் : புரிதல்கள் ஏற்படும்.
உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். மனதளவில் எதிர்காலம் சார்ந்த சில தெளிவான முடிவுகள் பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
அவிட்டம் : செல்வாக்கு உயரும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
சுப காரியம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிராமல் இருக்கவும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தெய்வப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்
பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறைமறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!
பஞ்சாங்கம் – ஆக.13 – புதன் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil