தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களை பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் என்பது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ள நிலையில் இதுகுறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் வடலூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்போது ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ஜெபராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது