பீகாரில் ஒரு பக்கம் சிறப்பு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்று பலரது பெயர் நீக்கப்பட்டு வரும் நிலையில், இருப்பிட சான்றிதழ் கேட்டு ட்ரம்ப் முதல் விலங்குகள் வரை க்யூவில் நிற்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பை மேற்கொண்டு வரும் நிலையில் லட்சக்கணக்கான வாக்காளர்களை கண்டறிய முடியவில்லை என பட்டியலை விட்டே நீக்கி வருகிறது. இதற்கு எதிர்கட்சிகள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் அதே பீகாரில் வேறு சில சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் Cat Kumar (பூனை குமார்) என்ற பெயரில் இருப்பிடச் சான்றிதழ் கேட்டு பூனை படத்தோடு ஒரு விண்ணப்பம் வந்துள்ளது. அதில் தந்தை பெயர் கேட்டி பாஸ், தாயார் பெயர் கேட்டியா தேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பீகாரில் இவ்வாறாக நடப்பது இது முதல்முறையல்ல. முன்னதாக சோனாலிகா என்ற ட்ராக்டருக்கு இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் வந்தது. பின்னர் டாக் பாபு என்று நாயின் போட்டோவுடனும், ட்ரம்ப் பெயரிலும் கூட இருப்பிட சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பீகாரில் இவ்வாறான விண்ணப்பங்கள் வரும் நிலையில் இதை செய்வது ஒரு நபரா அல்லது யாராவது குழுவாக இப்படி வேண்டுமென்றே செய்கிறார்களா என்று அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K