இன்னும் அஞ்சு வருஷம் தான். வரும் 2030க்குள் சந்திரனில் அணுமின் உற்பத்தி நிலையம் தொடங்கப்படும் என அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த 10 ஆண்டிற்குள் சீனாவும் சந்திரனில் அணு மின்னுற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on InstagramA post shared by Dialogue Pakistan (@dialoguepakistan)
மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா மீண்டும் செயல்படுத்த விரும்புகிறது. அதற்காக நிலவில் மனிதர்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் மையமாக இந்த அணுமின் நிலையம் செயல்படும் எனக் கூறப்படுகிறது. சந்திரனில் அணு உலை பொறுப்புடன் பயன்படுத்தப்பட்டால், நாடுகள் சந்திரனை அமைதியாக ஆராயவும், அவர்களின் பொருளாதார வளர்ச்சியைத் மேம்படுத்தவும் ஆழமான விண்வெளி பயணங்களுக்கான தொழில்நுட்பங்களை சோதிக்கவும் இது உதவியாக இருக்கும்.
பூமியைச் சுற்றிவரும் செயற்கை கோள்களும், நிலவில் தரையிரங்கும் இயந்திரங்களும் பொதுவாக சூரிய மின்சக்தி மூலம் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. சந்திரனில் 14 நாள் இருள் நீடிக்கிறது. அங்கு பனிக்கட்டி காணப்படுகிறது, அதுமட்டுமின்றி சூரிய ஒளி மேற்பரப்பை அடையாததால் சிக்கல்கள் நீடிக்கின்றன.
2030ம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் உற்பத்தி நிலையத்தை அமைக்க நாசா திட்டமிட்டு வருகிறது. இது நிலவில் மனிதர்கள் வாழும் இடங்களை அமைப்பதற்கான ஒரு பெரிய திட்டமாக கருதப்படுகிறது.
அத்துடன் நிலவின் தெற்கு துருவத்தில், 100 கிலோவாட் திறன் கொண்ட அணு உலை ஒன்றை அமைத்து அதன் மூலம் நிலவின் நீண்ட இரவுகளிலும், சூரிய ஒளி இல்லாத இடங்களிலும் தொடர்ந்து மின்சாரம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து நாசா நிர்வாகி சீன் டஃபி "இது விண்வெளிப் போட்டியில் அமெரிக்கா வெற்றி பெறுவதற்கான ஒரு முயற்சி" எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?