இது உங்க ஊரு அவெஞ்சரா?.. கூலி புக்கிங்கை பார்த்து அசந்து போன அமெரிக்க ரசிகர்..
CineReporters Tamil August 13, 2025 08:48 PM

Coolie: ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் உலகமெங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரிய ஆர்வத்தை எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அது கடந்த நான்கு நாட்களாகவே டிக்கெட் முன்பதிவில் எதிரொலித்து வருகிறது. டிக்கெட் முன்பதிவில் இதுவரை எந்த இந்திய சினிமாவும் செய்யாத சாதனையை கூலி செய்திருக்கிறது.

கூலி திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னட மொழிகளில் வெளியாகிறது. பல வெளிநாடுகளிலும் சுமார் 7000 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் ஆகிறது. எனவே உலகம் முழுவதும் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். கேரளாவில் முன்பதிவிலேயே இப்படம் ஒரு கோடி வசூலித்திருக்கிறது. மோகன்லாலில் எம்புரான் படத்திற்கு நிகராக முன்பதிவுகள் செய்யப்பட்டு இருக்கிறது. கேரளாவில் மட்டும் இப்படம் 100 கோடி வசூலிக்கும் என சொல்கிறார்கள். அதேபோல் கர்நாடகாவிலும் பல நாட்களுக்கு எல்லா காட்சிகளும் புக் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்திலும் 5 நாட்களுக்கு மேல் எல்லா காட்சிகளும் புக் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் முன்பதிவில் கூலி சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. வட அமெரிக்காவில் 2 மில்லியன் டிக்கெட்டுகளுக்கும் மேல் விற்பனையாகி பெரும் சாதனையை கூலி நிகழ்த்தி இருக்கிறது, இதுவரை எந்த தமிழ் சினிமாவிற்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது இல்லை.

#image_title

அமெரிக்க மாகாணங்களில் கூலி படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அமெரிக்க சினிமா ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் ’இங்குள்ள தியேட்டர்களில் 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. அதுவும் ஒரு டிக்கெட்டின் விலை 30 டாலராக இருக்கிறது. இது என்ன உங்க ஊரு அவெஞ்சரா?’ என கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு ரஜினி ரசிகர்கள் ‘ஆமாம் ரஜினி இந்தியாவின் சூப்பர்ஸ்டார்.. 74 வயதிலும் ஹீரோவாக ஹிட் கொடுக்கும் நடிகர் இவர்.. கூலி எங்க ஊர் அவெஞ்சர்தான்’ என அவருக்கு பதில் கூறி வருகிறார்கள்.

ரசிகர்கள் ரஜினி பற்றி குறிப்பிட்டதை பார்த்து ‘இப்படி நான் கேள்விப்பட்டதே இல்லை.. அதிசயமாக இருக்கிறது’ என அவர் கூறியிருக்கிறார். அதுவும் கூலி படத்திற்காக சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்திருப்பதை ஒரு ரசிகர் பதிவிட ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து இருக்கிறார் அந்த அமெரிக்க ரசிகர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.