முன்பெல்லாம் கடன் பெற வேண்டுமென்றால், பல ஆவணங்களை எடுத்துக்கொண்டு வங்கி, வங்கியாக ஏறி இறங்க வேண்டியிருக்கும். அப்படியே அனுமதி கிடைத்தாலும், நம் ஆவணங்களை சரிபார்ப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மாதக் கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியிருக்கும். ஆனால் தற்போது டிஜிட்டல் யுகத்தில் நொடிகளில் லோன் கிடைத்துவிடுகிறது. ஆன்லைனில் ஷாப்பிங் போல ஆன்லைனில்பெர்சனல் லோன் (Personal Loan) வாங்குவது அவ்வளவு எளிதாகிவிட்டது. குறிப்பாக ஆவணங்களும் தேவைப்படுவதில்லை. நம்மிடம் ஆதார் கார்டும், பான் கார்டும் (Pan Card) இருந்தால் நமக்கு கடன் கிடைக்கும். தற்போது நிறைய ஆன்லைன் செயலிகள் நமக்கு உடனடி கடன் வழங்குகின்றன படி லோன் போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்த சில நிமிடங்களில் லோன் வழங்குகின்றன. அது குறித்து விரைவில் பார்க்கலாம்.
உடனடி பெர்சனல் லோன் வழங்கும் செயலிகள்ஆதார் மற்றும் பான் கார்டு மட்டும் பயன்படுத்தி, முழுக்க டிஜிட்டல் முறையில் கடன் பெற முடியும் என்பதால் அவசரமாக பணம் தேவைப்படுபவர்களுக்கு இந்த முறை பெரிதும் உதவுகிறது. குறிப்பாக ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லாத நேரங்களில் மருத்துவ சிகிச்சை போன்ற தேவைகளுக்கு இந்த வகை லோன் செயலிகள் வரப்பிரசதாமாக அமைந்துள்ளன. ஆனால் பாதுகாப்பானவற்றை தேர்ந்தெடுப்பது இதில் மிகவும் முக்கியம். சில நேரங்களில், விண்ணப்பித்த சில நிமிடங்களில் அனுமதி கிடைக்கும். நமது பெயர், முகவரி போன்ற விவரங்களை லோன் வழங்கும் நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள ஆதார் அவசியமாகிறது. நமது ஆதார் எண்ணை சொன்னால், நிறுவனங்களிடம் இருந்து ஓடிபி வரும். அதனை சொல்லும் போது நமது விவரங்களின் உண்மைத் தன்மை குறித்து நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ளும்.
அதே போல நம் நிதி வரலாறு, கிரெடிட் ஸ்கோர் ஆகிய விவரங்களை பெற பான் கார்டு அவசியம். இதன் மூலம் நாம் ஏற்கனவே கடன் பெற்றிருந்தால் ஒழுங்காக செலுத்தியிருக்கிறோமோ போன்ற விவரங்களை பான் கார்டு மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்குகின்றன. எனவே இந்த இரண்டு முக்கிய ஆவணங்கள் இருந்தால் போதும் நமக்கு உடனடியாக கடன் கிடைக்கும்.
இதையும் படிக்க : பெற்றோருக்கு வீட்டு வாடகை செலுத்தினால் HRA க்ளெய்ம் செய்யலாமா?.. விதிகள் கூறுவது என்ன?
முக்கிய நன்மைகள்இதன் மூலம் கடன் பெற 21 முதல் 58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சில நிறுவனங்கள் உங்கள் மாத ஊதியத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். குறிப்பாக ரூ.15,000 முதல் ரூ.30, 000 வரை உங்கள் சம்பளத்துக்கு ஏற்ப லோன் கிடைக்கும். அல்லது சுய தொழில் செய்பவர்களாக இருந்தாலும் அதற்கு ஏற்ப கடன் கிடைக்கும். அதே போல சில டிஜிட்டல் செயலிலகள் கிரெடிட் ஸ்கோரையும் பரிசோதிக்கலாம்.
இதையும் படிக்க : மாறாத ரெப்போ விகிதம் – ஹோம் லோன் பெற்றவர்களுக்கு பாதிப்பா? எப்படி விண்ணப்பிப்பது?