இன்று காய்கறி வரத்து சற்றே குறைந்து காணப்படுகிறது. இது காய்கறிகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் கோயம்பேட்டில் அதிகாலை முதலே குவிந்துள்ளனர். இந்நிலையில் வெங்காயத்தின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா வெங்காயம் 14 முதல் 16 ரூபாய் வரையிலும், சாதாரண வெங்காயம் 18 முதல் 20 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. தக்காளி விலையை பொறுத்தவரை 40 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 10 ரூபாய் அதிகம். நவீன தக்காளி 50 ரூபாயில் இருந்து 15 ரூபாய் அதிகரித்து 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதால் முதல் தர தக்காளி 60 ரூபாய் என உயர்ந்துள்ளது. இரண்டாம் தரம் 50 ரூபாய், மூன்றாம் தரம் 40 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டியில் அதிக அளவு மழை பெய்து வருவதால் அங்கிருந்து வரும் கேரட்டின் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. அதன்படி, முதல் தரம் 70 ரூபாய், இரண்டாம் தரம் 60 ரூபாய், மூன்றாம் தரம் 50 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையில் மாற்றங்கள் ஏதும் இல்லை.