ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த சில நாட்களாக தங்க வர்த்தகத்தில் முன் எப்போதும் இல்லாத நிலையில் சவரன் ரூ.75,000த்தை கடந்து விற்பனையானது.
கடந்த 3 நாட்களாக எகிறிய தங்கம் விலையில் இன்று சற்று மாற்றம் காணப்படுகிறது.
நேற்றைய தினம் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.200 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 25 குறைந்து ரூ.9445க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ. 75,560 ஆக உள்ளது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 75 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ. 70 குறைந்து ஒருகிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 375க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ.127க்கும், ஒரு கிலோ ரூ.1,27,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தினம் தங்கத்தின் விலையில் இறக்கம் காணப்பட்டாலும், அடுத்து வரக்கூடிய நாட்களில் விலை நிலவரத்தில் மாற்றம் நிகழலாம் என்று வர்த்தகர்கள் கூறி உள்ளனர்.