டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பயப்படாத பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!
WEBDUNIA TAMIL August 11, 2025 06:48 PM

டிரம்ப்பின் வரிவிதிப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தை மிக மோசமாக சரியும் என்ற பங்குச்சந்தை வல்லுநர்களின் கணிப்பு பொய்யானது. கடந்த வாரம் ஓரளவு சரிந்தாலும், பெரிய வீழ்ச்சியில் இருந்து சந்தை தப்பியது. இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது இந்திய முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 109 புள்ளிகள் உயர்ந்து 79,966 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 24,408 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார், இன்ஃபோசிஸ், ஐடிசி, ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் ஃபார்மா, டிசிஎஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்து விற்பனையாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.