சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் விஜயை தூய்மை பணியாளர்கள் சந்தித்து பேசினர். தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிபிஎம் என்டிகே அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அவர்களுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது விஜய்யை போராட்டக் குழு நேரில் சந்தித்துள்ளது.