இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை வேடன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் மருத்துவர் ஒருவர், திரிக்காகரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இளம் பெண் மருத்துவர் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 376 சட்டப் பிரிவின் கீழ் பாடகர் வேடன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேடனின் பாடல்க்ளுக்கு ரசிகையாக இருந்த அந்த பெண், வேடனை சந்தித்துப் பேசி பழகியதாகவும், அந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் முடிவெடுத்துள்ளனர். என ஆனால் ஒரு கட்டத்தில் தன்னை விட்டு வேடன் பிரிந்துவிட்டதாகவும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன்னிடம் பல சமயங்களில் பணம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது வேடனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
வேடன் வெளிநாடுகளுக்குத் தப்பித்து சென்று விடாமல் இருப்பதற்காக போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.