தமிழ் திரைப்பட ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் படமான கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌ பின் சாஹிர், ஸ் ருதிஹாசன், ரபோ மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தற்போது படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.
இப்படத்தின் முன் பதிவுகள் இதுவரை 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த புகைப்படத்தில் பின்னணியில் கூலி படத்தில் ரஜினிகாந்த் கண்கள் திரையில் இருந்தது. அதே இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதனால் கூலி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. ஏற்கனவே அமீர்கான் சமீபத்தில் வெளியிட்ட பதிவில் சிவகார்த்திகேயனை டேக் செய்திருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் ரஜினிகாந்தின் சிறு வயது வேடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கலாம் என பேசப்படுகிறது. அவ்வாறு அமைந்தால் படம் மிகச் சிறப்பாக அமையும் என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.