'பரிதாபங்கள்' கோபி, சுதாகர் மீது வழக்கு போடுறதெல்லாம் சமூக தீண்டாமையை காட்டுகிறது - சீமான் ஆவேசம்!
Dinamaalai August 11, 2025 10:48 PM

பரிதாபங்கள் சேனலின் கோபி, சுதாகர் மீது வழக்கு போடுறதெல்லாம் சமூக தீண்டாமையைத் தான் காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனுஷ்கோடி என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

தனது புகார் மனுவில், “பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், "கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவதெல்லாம் சமூக தீண்டாமையை காட்டுகிறது. சமூகத்தின் சாதிய கொடுமையை காட்டுகிறது. பெருமை எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாதி, மதத்தில் இருக்கக்கூடாது. தமிழர்களுக்கு மொழி, இனம், தன்னுடைய வரலாறு, பண்பாட்டில் தான் பெருமை இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.