மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி குறித்து கேரள மக்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் திருச்சூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கோபி. இவர் மத்திய இணை அமைச்சருமாவார். கேரள மாணவர் காங்கிரஸ் அமைப்பு ஆகஸ்ட் 10ம் தேதி திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் சுரேஷ் கோபி குறித்து புகார் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த புகாரில் அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை. அவர் தொகுதிக்கு வருவதில்லை, மக்களால் அணுக முடியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுரேஷ் கோபி 2024 தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற பின்னர் தொகுதியை புறக்கணித்துவிட்டதாகவும், மக்களின் பிரச்சினைகளை கவனிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. உள்ளூர் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அவர் கவனம் செலுத்தவில்லை என புகார் கூறப்படுகிறது.
சுரேஷ் கோபி, மலையாள திரைப்பட நடிகராகவும், பாஜகவின் முக்கிய முகமாகவும் அறியப்படுகிறார். 2024 தேர்தலில் திருச்சூரில் காங்கிரஸ், இடதுசாரி வேட்பாளர்களை தோற்கடித்து பாஜகவிற்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தார். ஆனால், தொகுதி மக்களுடன் தொடர்பு இல்லாதது அவருக்கு எதிரான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் பதிவான இந்த புகார், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?