சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் 11வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி துப்புரவு பணியை முழுவதுமாக தனியார் வசம் ஒப்படைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ஊதியம் குறைவு, பணி நிரந்தரமின்மை உட்பட பல்வேறு பிரச்சினைகளை தூய்மைப் பணியாளர்கள் சந்தித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிமுக, தேமுதிக, இடது சாரிகள், நாம் தமிழர் உட்பட பல்வேறு கட்சியினர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று அவர்கள் கோரிக்கைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு அளித்தார்.
11 வது நாளாக போராட்டம் நடைபெறும் நிலையில் தவெக தலைவர் விஜய் போராட்டக் காரர்களை சென்னை பனையூரில் உள்ள தமது கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தவெக எப்போதும் துணை நிற்கும் என்று விஜய் போராட்டக்காரர்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?