எடப்பாடி பழனிசாமியின் 23ம் தேதி சுற்றுப் பயணம் திடீர் ஒத்திவைப்பு!
Dinamaalai August 11, 2025 11:48 PM

எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7ம் தேதி முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் 23ம் தேதி சுற்றுப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள், 23.8.2025 வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண மூன்றாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 23.8.2025 – சனிக் கிழமை அன்று சோழிங்கநல்லூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.