Investment : முதலீடு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
TV9 Tamil News August 12, 2025 12:48 AM

பணத்தை சம்பாதிப்பது மட்டுமன்றி, அதனை முறையாக செலவு செய்வது மற்றும் முதலீடு (Investment) செய்வதும் தான் பணத்தை பல மடங்கு உயர்த்துவதற்கான முக்கிய காரணியாக உள்ளது. சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்துக்கொண்டே இருப்பது அல்லது அவற்றை சேமிக்கின்றேன் என்ற என்னத்தில் வங்கி கணக்கில் வைத்திருப்பது ஆகியவை பொருளாதாரத்தை பெருகவிடாமல் தடுத்துவிடும். எனவே சம்பாதிக்கும் பணத்தில் பகுதி அளவாவது முதலீடு செய்வது சிறந்த பலன்களை தரும். இந்த நிலையில், பணத்தை முதலீடு செய்யும்போது கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பணத்தை முதலீடு செய்யும்போது கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

பணத்தை முதலீடு செய்யும்போது கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள் குறித்து நிதி ஆலோசகரான நிதின் கவுஷிக் கூறியுள்ளார்.

நிதி ஆலோசகர் கூறும் மூன்று முக்கிய அம்சங்கள்

💣 Brutal Truth: No one regrets these 3 things in investing… but everyone regrets ignoring them 👇

✅ Starting Early
• ₹5,000/month at 22 can become ₹2 Cr+ by 55 (12% CAGR)
• Start at 30? You’ll need ₹12,000/month for the same outcome
👉 Time isn’t just money. It’s…

— CA Nitin Kaushik (@Finance_Bareek)

இளம் வயதில் முதலீடு செய்வது

ஒவ்வொருவரும் தங்களது 22 வயது முதலே முதலீடு செய்ய தொடங்க வேண்டும். ஒருவர் தனது 22வது வயதில் இருந்து மாதம் ரூ.5,000 முதலீடு செய்கிறார் என்றால் அவர் தனது 55வது வயதில் சுமார் ரூ.2 கோடி வரை பணம் சேமித்திருப்பார். அவ்வாறு முதலீடு செய்யும்போது ஆண்டுக்கு 12 சதவீதம் அவரை லாபம் தரக்கூடிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் 22 வயதில் இல்லாமல் 30 வயதில் முதலீடு செய்ய தொடங்குகிறீர்கள் என்றால் 55 வயதில் ரூ.2 கோடி பெற ரூ.12,000 முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு வயது உயர உயர முதலீடு செய்வதற்கான தொகையும் அதிகரிக்கும் என்கிறார்.

இதையும் படிங்க : RD : தினமும் ரூ.340 முதலீடு செய்து ரூ.17 லட்சம் சேமிக்கலாம்.. எப்படி தெரியுமா?

முதலீட்டை தொடர்வது

முதலீட்டை பொருத்தவரை அதனை தொடர்ச்சியாக செய்வது மிகுந்த பலனை வழங்கும். இல்லையென்றால் முதலீடு செய்வதில் அர்த்தமில்லாமல் போய்விடும். அதாவது தற்போது முதல் நான் மாதம் மாதம் ஒரு திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய போகிறேன் என்று முடிவு செய்துவிட்டால் எந்த வித தடையுமின்றி அந்த முதலீட்டை தொடர்ந்து செய்துக்கொண்டே வரவேண்டும் என்று கூறுகிறார்.

குறுகிய கால ஏற்ற, இறக்கங்கள் குறித்து அஞ்ச கூடாது

பங்குச்சத்தை மாற்றத்திற்கு உட்பட்டது. அது சில சமயங்களில் கடுமையான சரிவை சந்திக்கும். இவ்வாறு சரிவு ஏற்படும் போது நிதி இழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் முதலீடு செய்வதை நிறுத்திவிட கூடாது. முதலீட்டை பொருத்தவரை தொடர்ந்து செய்வது தான் சிறந்த பலன்களை தரும். எனவே குறுகிய கால ஏற்ற, இறக்கங்கள் குறித்து அஞ்ச கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.