சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – முதல் படம் என்னனு தெரியுமா?
TV9 Tamil News August 12, 2025 01:48 AM

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது 50 வருடங்கள் முடிவடைந்துள்ளது. பஸ்ஸில் கண்டெக்டராக இருந்த அவரின் ஸ்டைலைப் பார்த்து இயக்குநர் கே. பாலசந்தர் நடிக்க அழைத்து வந்தார் என்பது அனைவரும் பல பேட்டிகளில் பார்த்து தெரிந்து இருப்போம். ஆனால் ரஜினிகாந்த் நடிகராக எந்தப் படத்தில் அறிமுகம் ஆனார் என்றால் சட்டென்று யாருக்கும் நினைவில் வராது. அப்படி நடிகர் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகம் ஆனப் படம் தான் அபூர்வ ராங்கள். கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் கே. பாலசந்தர் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் படத்தை கலகேந்திரா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர்கள் வி. கோவிந்தராஜன் மற்றும் ஜே. துரைசாமி இருவரும் இணைந்து தயாரித்து இருந்தனர்.

இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் சுந்தர்ராஜன், ஸ்ரீவித்யா, ஜெயசுதா, நாகேஷ், திடீர் கண்ணையா மற்றும் ரஜினிகாந்த் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் மூலமாக நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் சிறிய கதாப்பாத்திரம் தான் என்றாலும் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாயகனாக நடித்த கமல் ஹாசனுக்கு போட்டியான ரஜினிகாந்த்:

அதனைத் தொடர்ந்து தான் அறிமுகம் ஆன முதல் படத்தில் நாயகனாக நடித்த நடிகர் கமல் ஹாசனுக்கு போட்டியாக பின் நாட்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த். இவர்களின் முந்தைய தலைமுறை நடிகர்களில் எம்.ஜி.ஆர் – சிவாஜி ரசிகர்கள் சண்டை இருந்தது போல 80களில் கமல் ஹாசன் – ரஜினிகாந்தின் ரசிகர்கள் சண்டை நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

கமல் ஹாசன் உலக நாயகன் என்று ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினால் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இளம் தலமுறையினர் சினிமாவில் வந்துகொண்டே இருந்தாலும் அவர்களுக்கு போட்டியாக தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜன நாயகன் படத்தில் விஜயுடன் நடித்த அனுபவம் – நடிகர் பாபி தியோல்

ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் @ikamalhaasan அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். pic.twitter.com/K99sFlKOBR

— Rajinikanth (@rajinikanth)

Also Read… அஜித்திற்கும் பிரசாந்திற்கும் முன்பகை இருக்கும் போல – இயக்குநர் சொன்ன சம்பவம்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.