தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆணவ கொலைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்ட கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மிகவும் முக்கியமானதாக நடப்பு அரசியல் குறித்து பேசுகிறோம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டத்திற்கான கருப்பொருளை மீறி பேசக்கூடாது எனவும், அதிமுகவினருக்கு பதில் சொல்கிறோம் என்ற பெயரில் எதிர்வினை ஆற்ற கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இதுகுறித்து பேசிய திருமாவளவன் கூறியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் பேசி விட்டதாக பரப்பப்படும் கருத்துக்களுக்கு விளக்கம் தர நான் தயாராக இருக்கிறேன். இது குறித்து கட்சியினர் எதுவும் பேச வேண்டாம் எந்த தலைவர்களையும் அவமதிக்கும் நோக்கம் நமது கட்சிக்கு கிடையாது.
மேலும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசும் போது திராவிட எதிர்ப்பு என்றால் அது கருணாநிதி எதிர்ப்பு என மட்டும் விளக்கினேன். இதனை அடுத்து என்னுடைய அரசியலும் கருணாநிதியை எதிர்த்து தான் என்பதை கூறினேன். ஆனால் எந்த ஒரு தலைவர்களையும் அவமதிக்கும் நோக்கில் நான் அதை பேசவில்லை.
அவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். இது குறித்து கட்சியினர் யாரும் பேச வேண்டாம். ஆர்ப்பாட்ட கூட்டத்தில் தமிழகத்தில் நடக்கும் ஆவண கொலைகளுக்கான தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். தேசிய அளவில் மத்திய அரசின் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைப்பதையே குறிக்கோளாக செயல்படுவோம் என பேசினார்.