திமுக அரசுக்கு புதிய நெருக்கடி..? தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் களமிறங்கும் நடிகர் விஜய்… நேரில் சந்தித்த பின் போராட்டக் குழுவினர் பரபரப்பு பேட்டி..!!
SeithiSolai Tamil August 12, 2025 03:48 AM

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் விஜயை தூய்மை பணியாளர்கள் சந்தித்து பேசினர். தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிபிஎம், என்டிகே, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அவர்களுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது விஜய்யை போராட்டக் குழு நேரில் சந்தித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். பனையூரில் விஜய்யை சந்தித்த பிறகு பேசிய போராட்டக் குழுவினர் விஜய் போராட்ட பந்தலுக்கு நேரில் வருவதாக கூறியதாகவும் டிராபிக் பிரச்சனை ஏற்படும் என்பதால் தாங்கள் இங்கு வந்ததாகவும் கூறினார். மேலும் முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் கூறினர். இது திமுக அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.