Yogi Babu : யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்.. வெளியான அறிவிப்பு இதோ!
TV9 Tamil News August 12, 2025 03:48 AM

நடிகர் யோகி பாபு (Yogi Babu) தமிழ் சினிமாவில்  நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.  இவர் தமிழில்தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் ரஜினிகாந்த் வரை பல பிரபலங்களின் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் சினிமாவில் படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் வெளியான, கோலமாவு கோகிலா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது காமெடி நடிகராக மட்டுமல்லாமல், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இயக்குநர் அமுத சாரதி (Amutha Sarathi) இயக்கத்தில், சன்னிதானம் பி..ஓ (Sannidhanam P.O) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இதை நடிகை மஞ்சு வாரியர் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து வெளியிட்டுள்ளனர். தற்போது வெளியான இந்த முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ரஜினிகாந்த்தின் ‘கூலி’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

யோகி பாபு வெளியிட்ட  சன்னிதானம் பி.ஓ படத்தின் முதல் பார்வை

சன்னிதானம் P O. படத்தின் இயக்குனர் அமுத சாரதிக்கும்.
,தயாரிப்பாளர்கள் மது ராவ்,விவேகநாந்தன்,சபிர் பதான், கதாநாயகன் ரூபேஷ் ரெட்டிக்கும் ரொம்ப நன்றி. இந்த படத்தில் எனக்கு ஒரு கதாப்பாத்திரம் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. மனமார்ந்த வாழ்த்துக்கள். படம் வெற்றியடைய… pic.twitter.com/lDcxG7GWOX

— Yogi Babu (@iYogiBabu)

இந்த படத்தில் நடிகர் யோகி பாபு முன்ணனி வேடத்தில் நடிக்க, அவருடன் நடிகர்கள் சித்ரா மற்றும் பிரமோத் ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படமானது சபரிமலையை வைத்து முக்கிய கதைக்களத்துடன் உருவாகி வருகிறதாம். இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் உருவாகி வருகிறதாம். இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

தெலுங்கில் அறிமுகமாகும் யோகி பாபு :

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக யோகி பாபு இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவை தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிலும் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இவர் நடிகர் பிரம்மானந்தம் நடிக்கும், குர்ரம் பாப்பி ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம், தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் முரளி மனோஹர் ரெட்டி இயக்கி வருகிறார். இந்த படம்தான் யோகி பாபு தெலுங்கில் நடிக்கும் முதல் திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.