நடிகை வரலட்சுமி சரத்குமார் (Varalakshmi Sarathkumar), தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் நடிகர் சரத்குமாரின் (Sarathkumar) மகளும் கூட, இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்தது வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலமான வில்லி கதாபாத்திரத்திலும் நடித்தது அசத்தி வருகிறார். இவருக்கு அறிமுக திரைப்படமாக அமைந்தது போடா போடி (Podaa Podi). கடந்த 2012ம் ஆண்டு வெளியான இப்படத்தில், நடிகர் சிலம்பரசனுக்கு (Silambarasan) ஜோடியாக நடித்த சினிமாவில் நுழைந்தார். இதனையடுத்து கன்னடம், மலையலாம், தெலுங்கு என அடுத்தடுத்தாக மொழிகளிலும் தனது நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நிக்கோலாய் சச்தேவ் (Nicholai Sachdev) என்பவரை திருமணம் செய்துகொண்டார். நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் இருவரும் இணைந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்பான விஷயங்களை செய்துள்ளனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : ஃபகத் பாசில் மற்றும் வடிவேலுவின் ‘மாரீசன்’ படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்!
View this post on Instagram
A post shared by Varalaxmi Sarathkumar (@varusarathkumar)
இந்த வீடியோவில் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரின் கணவர் நிக்கோலாய் சச்தேவ் இருவரும், ஆதரவற்ற குழந்தைளை நேரில் சந்தித்துள்ளனர். அவர்கள் சந்தித்தது மட்டுமில்லாமல், அந்த குழந்தைகளின் ஆசையையும் நிறைவேற்றியுள்ளனர். அவர்களை நேரடியாக கடைக்கு கூட்டிச் சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். மேலும் அவர்களுடன் நடனமாடுவது, உணவு வழங்குவது மற்றும் கேக் வெட்டி கொண்டாடுவது என அந்த ஆதரவற்ற குழந்தைங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றனர்.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தின் டீசர் ரெடி.. எப்போது ரிலீஸ் தெரியுமா?
இந்த வீடியோவை வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவின் கீழ் ரசிகர்கள் தற்போது தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் மக்கள் மத்தியில் இந்த வீடியோ படு வைரலாகி வருகிறது.
நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துவரும் படங்கள் :நடிகை வரலட்சுமி சரத்குமார், தமிழில் ஜன நாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர் ரிசானா என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் சந்திரன் ருட்னம் என்பவர் இயக்கிவருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.