சிங்கப்பெண்ணே: ஆனந்தி, அன்பு, ஜெயந்தி, முத்து நால்வரும் ரகுவைத் தேடி அவனது வீட்டுக்குச் செல்கின்றனர். அங்கு அவனது நண்பன் சிக்குகிறான். அவனை அடித்து உதைத்து அன்பு கேட்கிறான். கடைசியில் உண்மையைச் சொல்கிறான். அது மட்டும் அல்லாமல் ரகு வரும்போது அவனது வருகையை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அன்பு அவனிடம் கட்டளை இடுகிறான்.
அதற்கு அவனும் சரி என்று சொல்ல இருவரும் செல்போன் நம்பரை குறித்துக் கொள்கின்றனர். மித்ரா ஆர்வத்துடன் அவர்களை ஃபாலோ பண்ண, கடைசியில் அன்பு டிமிக்கி கொடுத்துவிட வழி தவறி எங்கோ சென்று விடுகிறாள் மித்ரா. அவளை கருணாகரன் சாலையோரத்தில் சந்திக்கிறான். அவனிடம் ரகுவைத் தேடி அன்பு, ஆனந்தி அலைவதைப் பற்றிச் சொல்கிறாள். உடனே ரகுவுக்குப் போன் போடு என்கிறாள்.
கருணாகரன் போன் போட்டால் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்று வருகிறது. தொடர்ந்து அவனது நண்பனின் போன் நம்பர் தெரியுமா என்று கேட்கிறாள் மித்ரா. அதெல்லாம் தெரியாது என்கிறான் கருணாகரன். என்ன கருணாகரன் இவ்ளோ அசால்டா இருக்கீங்க. ஆபீஸ் விஷயத்துல இருக்குற மாதிரி இந்த விஷயத்துலயும் அசால்டா இருக்காதீங்க என்கிறாள் மித்ரா.
அதோடு ஆனந்தி வந்ததுல இருந்து முழுவேலையா ரகுவைத் தேடுறதுல தான் இருக்குறா. அவளுக்குத் துணையா அன்புவும் இருக்கிறான். இதற்கிடையில் கண்ணனிடம் நீதான் எனக்கு உறுதுணையா இருக்கணும். வயித்துல வளர்றதுக்கு யாரு காரணம்னு சொல்லித் தரணும் என கண்ணனிடம் ஆனந்தி வேண்டுகிறாள்.
இதற்கிடையில் அவளது மாமா சரவணன் அதாங்க புதுமாப்பிள்ளை ஆனந்தியிடம் தொடர்பு கொண்டு போனில் பேசுகிறான். கடைசியில் கோகிலாவிடம் கொடுக்கச் சொல்லியும் பேசுகிறான். ஆனந்தி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ கண்டிப்பா தான் களங்கமானவள் அல்லன்னு நிரூபிப்பாள் என்கிறாள். அதன்பிறகு நான் அங்கே வருவதுதான் முறை என்கிறாள் கோகிலா.
இதற்கிடையில் ஆனந்தியை ரகுவின் நண்பன் தள்ளி விட்டதில் சுவரில் வயிறு மோதியதில் ஆனந்திக்கு வயிறு வலி வந்து விடுகிறது. துடிக்கிறாள். கோகிலா பதற்றத்துடன் ஓடுகிறாள். ரெஜினாவை அழைக்கிறாள். வார்டனை அழைக்கிறாள். அதன்பிறகு கோகிலா கைப்பக்குவமாக ஒரு நாட்டு மருந்தைத் தயாரித்துக் கொடுக்கிறாள். அதில் வலி கொஞ்சம் குறைகிறது. டாக்டரிடம் அழைத்துச் செல்வார்களா? அவர் என்ன சொல்வார்?அடுத்து என் ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.