பிரபாஸின் பாகுபலி தி எபிக் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
TV9 Tamil News August 12, 2025 12:48 PM

இயக்குநர் ராஜமௌலியின் (Director Rajamouli) இயக்கத்தில் ரசிகர்கள் கல்ட் படமாக கொண்டாடும் படம் பாகுபலி. இந்தப் படம் இரண்டு பாகங்களாக திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகம் ஜூலை மாதம் 10-ம் தேதி 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது இந்த நிலையில் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததால் படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக பாகுபலி தி எபிக் என்ற பெயரில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதற்கான பணிகளிலும் படக்குழு தீவிரமாக ஈடுபட்டது. மேலும் பாகுபலி படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் இடம்பெறாத பல காட்சிகள் இந்த பாகுபலி தி எபிக் படத்தில் இருக்கும் என்றும் இயக்குநர் ராஜமௌலி தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாகுபலி தி எபிக் படத்தின் டீசர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி பாகுபலி தி எபிக் படத்தின் டீசர் நேரடியாக திரையரங்குகளில் ஒளிபரப்ப உள்ளதாகவும் அதுவும் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள கூலி மற்றும் வார் படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 31-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.

Also Read… விருமாண்டி படத்துக்கு இசையமைக்கமாட்டேன் என சொன்னேன்.. இளையராஜா ஓபன் டாக்!

பாகுபலி தி எபிக் குறித்து ராஜமௌலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Baahubali…
The beginning of many journeys.
Countless memories.
Endless inspiration.
It’s been 10 years.

Marking this special milestone with #BaahubaliTheEpic, a two-part combined film.

In theatres worldwide on October 31, 2025. pic.twitter.com/kaNj0TfZ5g

— rajamouli ss (@ssrajamouli)

இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் நடிகர்கள் ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ரோஹினி, நாசர், ஜான் கொக்கேன், தனிகெல்லா பரணி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருதனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Ramkumar Balakrishnan : ‘அயோத்தி’ படத்திற்குத் தேசிய விருது கொடுக்கலாம் – பார்க்கிங் இயக்குநர் கருத்து!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.