Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
வீட்டில் கிருஷுக்கு மீனா சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கிறார். அதற்கு விஜயா ஏற்கனவே அம்மா விட்டுட்டு ஃபாரின் ஓடிப்போயிட்டா. இப்ப பாட்டியும் போய்ட்டா நம்ம எப்படி இந்த பையனை வச்சுக்க முடியும் எனத் திட்டிக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது வரும் மனோஜ் அங்க பாட்டி எங்க என கேட்க விட்டுட்டு போன கதையை கூறுகிறார். ரோகிணி அமைதியாக ஒன்றும் சொல்ல முடியாமல் நிற்கிறார். இந்த பையன் இருக்கக் கூடாது என மனோஜ் கூறுகிறார். இப்ப யாரும் இல்லாமல் அவன் எங்க அனுப்புறது என மீனா கேட்க நீயும், உன் புருஷனும் வெளியில் போய் தங்கி பாத்துக்கோங்க என்கிறார்.
இதில் கடுப்பான அண்ணாமலை யாரும் இல்லாத பையனுக்கு உதவி செய்யும் உன் தம்பியை நீயே வெளியே அனுப்ப நினைக்கிற எனத் திட்டுகிறார். மனோஜ் விஜயாவிடம் இவனை வெளியில் அனுப்ப நான் ஒரு முடிவு பண்ணுறேன் என ரோகிணியை அழைத்துக்கொண்டு வெளியில் செல்கிறார்.
மீனா கிரிஷை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு செல்ல கிரிஷ் மற்றும் சத்யா விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். மீனா அவன் பாட்டி எங்கையோ போயிட்டாங்க எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். சீதா புகார் கொடுத்து தேட சொல்லலாமா எனக் கேட்க அவங்க தெரியாம தொலைஞ்சா சரி. அவங்க வேண்டும் என்றே தானே போய் இருக்காங்க என்கிறார்.
சத்யா போட்டோவை வச்சி சோஷியல் மீடியாவில் தேட சொல்லலாம் எனக் கூற அதை ரெடி செய்துவிட்டு சொல்வதாக கூறுகிறார். சீதாவும் அருணுக்கு புரோமோஷன் கிடைக்க இருக்கும் விஷயத்தை சொல்கிறார். பின்னர் கிரிஷ் மற்றும் மீனா கிளம்பிவிடுகின்றனர்.
ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் ரவி மற்றும் ஸ்ருதியை அழைத்து கிரிஷ் பாட்டி காணாமல் போன விஷயத்தை கூறுகின்றனர். இதில் அதிர்ச்சியாகும் ரவி எப்படி என்ன ஆச்சு எனக் கேட்க அதெல்லாம் தெரியாது என்கிறார். ஸ்ருதி அப்போ அவங்க அம்மா குறித்து விசாரிக்கலாம் என்கிறார்.
இதில் ரோகிணி அதிர்ச்சியாக மனோஜ் அவளே பிள்ளையை துரத்திவிட்டு ஜாலியா இருக்கா? எனக்கு என்னமோ அவ வாழ்க்கையை பத்திதான் அவளுக்கு நினைப்பு இருக்கும் போல. நம்ம வீட்டில் அவன் இருக்க கூடாது. அதனால் மறுபடியும் அந்த முத்து வோட்டிங் எடுப்பான். அப்போ நீங்க அவன் வெளியில் போக சப்போர்ட் செய்யணும் எனக் கூறிவிட்டு செல்கிறார்.
பின்னர் ரவி மற்றும் ஸ்ருதி என்ன செய்வது என யோசித்து கொண்டு இருக்கின்றனர். வீட்டிற்கு முத்து வந்து ஆட்டோ ஸ்டாண்டில் தேடினேன். எங்குமே எந்த பதிலுமே கிடைக்கவில்லை எனக் கூறுகிறார். கிரிஷிடம் நம்பர் தெரியுமா எனக் கேட்க அவனும் தெரியாது என்கிறார். மீனா அவங்க போட்டோ ஸ்கூல் ரெஜிஸ்டரில் இருக்குமே எனக் கேட்க ரோகிணி அதிர்ச்சியாகிறார்.